உள்ளடக்கத்துக்குச் செல்

மக்ரா சிகரம்

ஆள்கூறுகள்: 34°34′26″N 73°29′43″E / 34.57389°N 73.49528°E / 34.57389; 73.49528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்ரா சிகரம்
மக்ரா சிகரம், சோக்ரான்
உயர்ந்த புள்ளி
உயரம்3,885 m (12,746 அடி)[1]
ஆள்கூறு34°34′26″N 73°29′43″E / 34.57389°N 73.49528°E / 34.57389; 73.49528[2]
புவியியல்
மக்ரா சிகரம் is located in பாக்கித்தான்
மக்ரா சிகரம்
மக்ரா சிகரம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
எளிய வழிHike

மக்ரா (Makra Peak) என்பது வட பாக்கித்தானில் உள்ள இமயமலையின் கசாரா பகுதியிலுள்ள மன்செரா மாவட்டத்திலுள்ள ஒரு சிகரமாகும் .இது 3,885 மீட்டர் (12,746 அடி) உயரம் மற்றும் இஸ்லாமாபாத்திலிருந்து ககன் பள்ளத்தாக்கு செல்லும் சாலையில் கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர்கள் (120 மை) தொலைவில் உள்ளது. [3] கிவாயில் இருந்து, 7-கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ஒரு சாலை, பல விடுதிகளைக் கொண்ட ஒரு சுற்றுலாத் தளமான சோக்ரானுக்கு கொண்டு செல்கிறது; பாதை தொடர்ந்து சிரி ஏரி வரை சென்று பேயி ஏரியில் முடிகிறது. இங்கிருந்து மக்ராவின் உச்சிக்கு செல்ல நான்கு மணி நேரமாகும். பனி மற்றும் மலைகளின் சாய்வு காரணமாக மக்ராவில் நடைபயணம் கடினமாக உள்ளது.

மக்ரா சிகரம், சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு

மலையேறுவதற்கு நேராக இருந்தாலும், புயலின் போது உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதன் சிரமங்கள் இருந்தபோதிலும், மலைச்சிகரம் கசாரா மற்றும் ஆசாத் காஷ்மீரின் நல்ல காட்சிகளை வழங்குகிறது. மோசமான வானிலை, குறிப்பாக அடர்ந்த மூடுபனி மற்றும் செங்குத்தான சில பகுதிகளின் விளைவாக இறப்புகள் ஏற்படுகின்றன. மலையின் பனிப்பாறையிலிருந்து வரும் நீர் குன்ஹர் ஆற்றுக்கு நீர வழங்குகிறது. வலையில் இருக்கும் சிலந்தியைப் போன்ற பனியில் அதன் வடிவம் இருப்பதால், உள்ளூர் மக்களால் இந்த இடம் மக்ரா (உருது மொழியில் சிலந்தி என்று பொருள்) என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டது.

புகைப்படம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Makra Peak Elevation". www.summitpost.org. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  2. "Makra on Google Maps". கூகுள் நிலப்படங்கள். பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  3. "Makra Peak, Shogran, Kaghan". www.pakistantoursguide.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ரா_சிகரம்&oldid=3778165" இலிருந்து மீள்விக்கப்பட்டது